சீறி பாய்ந்த கார்... களமிறங்கிய கும்பல் -இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை... அதிர்ந்த காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சி பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த பிரபா என்கிற பிரபாகரன் மீது, காஞ்சிபுரம் சுற்றுவட்டார காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக கையெழுத்திட்டு பிரபாகரன் வீடு திரும்பினார். அப்போது காரில் வந்த மர்மநபர்கள் ஓட ஓட விரட்டி, பயங்கர ஆயுதங்களுடன் விரட்டிச் சென்று பிரபாகரனை வெட்டிப் படுகொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரபாகரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.