பாதி எரியாமல் வெளியே வந்த சடலம்... சட்டென உறைந்து நின்ற உறவினர்கள் - சென்னை மயானத்தில் நடந்த அதிர்ச்சி

Update: 2023-08-14 13:01 GMT

எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்த நிலையில், அவரது சடலம் நெசப்பாக்கம் மயானத்திற்கு மாலை ஐந்தரை மணிக்கு எடுத்துச் சென்றுள்ளனர். எரிமேடைக்கு அனுப்பி ஒருமணி நேரம் உறவினர்கள் காத்திருந்த போது, சடலம் சரியாக எரியாமல் இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ந்த நிலையில், மீண்டும் உடலை எரிக்க எரிமேடைக்கு அனுப்பப்பட்டது. இதைக் கண்டித்து மயானம் முன்பு உறவினர்கள் மறியல் நடத்தினர். இரவு ஒன்பதரை மணிவரை சடலம் எரிந்துள்ளது. சாதாரணமாக ஒரு சடலத்தை எரிக்க 1 மணி நேரமே தேவைப்படும் நிலையில், இந்த சடலம் கிட்டத்தட்ட 4 மணி நேரமாக எரிந்துள்ளது. 2 பக்கங்களிலும் பர்னர் எரிய வேண்டும். ஆனால் ஒரு பக்கம் மட்டுமே எரிவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பும் இதேபோல் ஒரு சடலம் சரியாக எரியாமல் வெளியில் போடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 15 நாட்கள் ஆகியும், எரிமேடையில் ஏற்பட்ட பிரச்சினை சரி செய்யப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 6 மாதங்களாக இந்த மயானத்தில் பிரச்சினைகள் தொடர்ந்து வருவதால், மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தலையிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்