உச்சி வெயிலில் மாற்றுத்திறனாளி செய்த செயல்.. மனம் இறங்கிய கலெக்டர்.. உடனே போட்ட உத்தரவு
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் கொளுத்தும் வெயிலில், முருகேசன் என்ற மாற்றுத்திறனாளி தவழ்ந்து தவழ்ந்து வந்த சம்பவம் பார்ப்போரை கலங்க செய்தது. அப்போது மருத்துவமனைக்கு திடீரென வந்த மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், முருகேசனின் நிலைமை குறித்து கேட்டறிந்து உடனடியாக அவர் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை
மேற்கொள்வதாக கூறினார்.
மேலும் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்ததுடன் உடனடியாக பேட்டரி வாகனத்தை வரவழைத்து அவரை பேருந்து நிலையம் வரை அழைத்துச் சென்று விடுமாறு அறிவுறுத்தினார்.