விஸ்வரூபம் எடுக்கும் சுவாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவால் வீட்டில் எடுத்து செல்லப்பட்ட முக்கிய...
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற போது, தன்னை, முகம், மார்பு வயிறு என என்னை சரமாரியாக அடித்தார் என பிபவ் குமார் மீது, சுவாதி மாலிவால் புகார் கூறினார். இதன் அடிப்படையில் பிபவ் குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்த சிசிடிவி ஆதாரங்களை எடுத்துச்சென்றனர். இந்த நிலையில், சிசிடிவி ஆதாரங்களை குளறுபடி செய்யும் முயற்சியில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டுள்ளதாக போலீஸ் குற்றம் சாட்டியுள்ளது.