"வீட்டை கொளுத்திய ஊராட்சி மன்ற தலைவரின் மகன்" - கதறும் மாற்றுத்திறனாளி பெண்

Update: 2024-07-08 15:13 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கருவாழக்கரை கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருக்கும்... கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவரான பழனிவேல் என்பவரின் மகன் பரமேஸ்வரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், கடந்த மாதம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் இருவரும் தகராறில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டதாக சொல்லப்படுகிறது. இறுதியாக கோயில் திருவிழாவில் நடந்த தகராறில், பரமேஸ்வரன் கழுத்தில் அணிந்திருந்த செயினை தேவேந்திரன் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே, இது தொடர்பாக ஊர்க்கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. அதில், பரவேஸ்வரன் அணிந்திருந்த தங்கச் சங்கிலியின் ஒரு பகுதியை திரும்பி கொடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனவும் ஊர் முக்கியஸ்தர்கள் கூறியதாகவும், இதற்கு தேவேந்திரன் உடன் பட வில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பரமேஸ்வரன், தனது ஆட்களுடன் சேர்ந்து தேவேந்திரனின் வீட்டிற்குள் புகுந்து தகராறு செய்ததாகவும், தொடர்ந்து தேவேந்திரனையும், அவரது மனைவியையும் தாக்கி வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதோடு, சூறையாடிச் சென்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்