`மகன் கல்யாணம்' அம்மா போட்ட சபதம் - பரிதாபமாக போலீசில் சிக்கிய காதலி

Update: 2024-10-31 14:08 GMT

`மகன் கல்யாணம்' அம்மா போட்ட சபதம் - பரிதாபமாக போலீசில் சிக்கிய காதலி

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியைச் சேர்ந்தவர் சிவா... இவருக்கு ரயில் பயணத்தின் போது சென்னை அருகே தாம்பரத்தைச் சேர்ந்த அபி பிரபா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது... தனது தாயிடம் சிவா காதல் விவகாரத்தைத் தெரிவித்த நிலையில் அவரது தாயோ தன் மகனை பெண் எஸ்.ஐக்குத் தான் திருமணம் செய்து கொடுப்பேன் என கூறியதாக தெரிகிறது.. இதனால் அபி பிரபாவிடம் உதவி ஆய்வாளர் வேடமணிந்து வருமாறு சிவா தெரிவித்துள்ளார்... அவ்வாறே அபியும் வரவே, அவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாகவும் அறிமுகப்படுத்தி உள்ளார்... இந்த விஷயம் ஊர் முழுக்க பரவிய நிலையில் வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிந்தனர். இதையடுத்து உதவி ஆய்வாளர் போல் வேடமணிந்து ஏமாற்றிய அபி பிரபாவையும் அவரது காதலரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்