பண்டல் பண்டலாக அறை...முழுக்க பதுக்கப்பட்ட சேலைகள்..பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2024-03-22 08:36 GMT

வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஆந்திராவில் ஆளுங்கட்சியினர் பதுக்கி வைத்திருந்த ஐந்தாயிரம் சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் பொது தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், பல்நாடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக சேலைகளை பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற அதிகாரிகள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி படத்துடன் கூடிய பெட்டிகளில் இருந்த 5 ஆயிரம் சேலைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அந்த வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தபட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்