தந்தி டிவி செய்தி எதிரொலி.. நிவாரண பொருட்கள் வழங்கிய சூர்யா ரசிகர்கள்

Update: 2023-12-24 02:08 GMT

தந்தி தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில், நெல்லை நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்தினர் நிவாரண பொருள்கள் வழங்கினர். தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த செய்தி நமது தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்தினர் உணவு பொட்டலங்கள் உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்