பேருந்திற்காக காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் நேற்று முன்தினம் இரவு பேருந்தை விட்டு இறங்கி நடந்து சென்ற பெண்ணிடம் ற்கு இருவர் லிஃப்ட் கொடுப்பது போல் பேசி, இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று, ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில், பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், ராயந்தூர் கிராமத்தை சேர்ந்த பிரவீன், ராஜ்கபூர் ஆகிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசாரிடமிருந்து தப்பியோட முயற்சித்தபோது ஒருவருக்கொருவர் இடறி விழுந்ததில் பிரவீனுக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. ராஜ்கபூருக்கு கை எலும்பு முறிந்ததால் இருவரும் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.