ஆசை ஆசையாக புது வீட்டில்... துடிதுடித்து பலியான உயிர்... கதறி துடித்த உறவுகள்...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்தார். மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குருக்கள்பட்டி கிராமத்தில் பெரியதுரை என்பவருக்கு சொந்தமான புதிய வீட்டில் ஆனந்த் உள்பட இரண்டு பேர் பிளம்பிங் வேலை செய்து வந்தனர். அந்த வீட்டின் மேல் பகுதியில் 11 ஆயிரம் கிலோ வாட் திறன் கொண்ட மின்கம்பி சென்று கொண்டிருந்தது. திடீரென மின்சாரம் தாக்கியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவரின் உடலை மீட்க போலீசாரோ, மின்வாரிய அதிகாரிகளோ நீண்ட நேரமாக வராததால் உற்வினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுதியது.