தென்காசி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் தொடர்ந்து 7வது முறையாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தோல்வி அடைந்த நிலையில், தென்காசி நாடாளுமன்ற தொகுதியில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், இன்று இல்லாவிட்டாலும் நாளை நிச்சயம் ஒட்டுமொத்த மனங்களையும் வென்றெடுப்பதாக, தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2 லட்சத்து 29 ஆயிரத்து 480 வாக்குகள் பெற்ற நிலையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.