சுடலைமாடன் கோயில் கொடையில் இரட்டை கொலை.. தமிழகத்தை அதிரவிட்ட சம்பவத்தில் பரபரப்பு
நெல்லை மாவட்டம், திசையன்விளையில் இரட்டைக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன.
அப்புவிளை அருகே காரம்பாடு சுடலை மாடசாமி கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில், மதியழகன், மதிராஜா சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், உடற்கூராய்விற்கு பின்னர் சடலங்களை வாங்க மறுத்து, உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு வாழ்வாதாரத்திற்கான வழிவகை செய்ய வேண்டுமென போராட்டம் நடத்த முயன்றனர். அதன்பின்னர், அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து சடலங்களை பெற்றுச் சென்றனர்.