இனி டாஸ்மாக் கடைகளில் இதற்கு அனுமதி இல்லை...மீறினால் கடும் நடவடிக்கை

Update: 2024-01-21 10:18 GMT

டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களில் இரவுநேர மது விற்பனைக்கு அனுமதிக்க கூடாது என, டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது விதிகளை மீறிய செயல் என குறிப்பிட்டுள்ள டாஸ்மாக் நிர்வாகம், பார்களில் மதுபானங்களை விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் பணியாளர்கள் மதுபானங்களை கொடுக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. மீறி கொடுத்தால் சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மீதும் பணி நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்