கும்பகோணத்தில் வங்கியில் கட்டுவதற்காக டாஸ்மாக் ஊழியர் ஒருவர் எடுத்துச் சென்ற 6 லட்சத்து 39 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, சீல் வைத்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பணத்திற்கான உரிய ஆதாரம் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்