அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் 2021 மற்றும் 2022ஐ செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 2021 ஜூலை முதல் 2025 ஜூன் வரையும், ஓய்வூதியர்களுக்கு 2022 ஜூலை முதல் 2026 ஜூன் வரையும், 4 ஆண்டுகள் மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும், ஓய்வூதியர்களுக்கும், அரசு மருத்துவமனைகளில்
5 லட்சம் ரூபாய் வரை கட்டணமில்லாமல் சிகிச்சை பெற இதன் மூலம் வகை செய்யப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட நோய்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற வகை செய்யப்பட்டுள்ளது. 203 வகை நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பயன் பெற முடியும். அரசு மருத்துவமனைகளிலுள்ள அனைத்து கட்டண படுக்கை
பிரிவுகளில் இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறலாம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.