இதுவரை இல்லாத புதிய உச்சம்... வியப்பில் அண்டை மாநிலங்கள்... தமிழகம் புதிய சாதனை

Update: 2024-08-27 17:22 GMT

காற்றாலை மற்றும் சூரிய மின்னாற்றல் மூலமான மின்

உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை படைத்துள்ளது.


தமிழகத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தியின் அளவு, கடந்த

ஞாயிறு அன்று 5 ஆயிரத்து 648 மெகாவாட்டாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 574 மெகாவாட் அளவுக்கு சூரிய

ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் உட்கட்டமைப்பு

உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ஆயிரத்து 462 மெகாவாட் கடந்த 2023-24ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டதாகும்.

ஒவ்வொரு மாதமும், குறைந்தபட்சம் 100 மெகாவாட் மின்சாரம் சூரிய சக்தி மூலம் புதிதாக உற்பத்தி செய்யப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. கடந்த ஞாயிறு அன்று காற்றாலை மின் உற்பத்தி 7.81 கோடி யூனிட் ஆக அதிகரித்தது.

அன்றைய தினம் தமிழ்நாட்டிற்குத் தேவையான மின்சாரத்தில் சுமார் 35 சதவீதம், காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் பூர்த்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்