தமிழகத்தில் அதிரடி காட்டிய போலீஸ்...பொறி வைத்து தட்டி தூக்கிய காவல்துறை

Update: 2024-09-24 10:18 GMT

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா மற்றும் கஞ்சா சப்ளையில் ஈடுபட்ட நபர்கள் பிடிபட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அக்பர் சாலையில் சர்புதீன் என்பவர் தனது வீட்டில் ஹான்ஸ், குட்கா, பான் மசாலா, கூல் லிப் ஆகிய பொருட்களை பதுக்கி வைத்திருந்தார். இவற்றை பறிமுதல் செய்த போலீசார், சர்புதீனை கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள மளிகை கடைக்கு, தனியார் கொரியர் நிறுவனம் ஒன்று 300 கிலோ அளவிலான குட்கா பொருட்களை சப்ளை செய்தது. பல நாட்களாக தனியார் கொரியர் நிறுவனத்தை கண்காணித்து வந்த திருவள்ளூர் மாவட்ட தனிப் படை போலீசார், குற்றவாளிகள் 2 பேரை கையும் களவுமாக பிடித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த முத்துக்குமார் என்பவர் பிடிபட்டார். இந்திராநகர் பகுதியில் வைத்து அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா, 16 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த இரண்டு பேர் பிடிபட்டனர். பிடிபட்ட குமணன்தொழு கிராமத்தை சேர்ந்த ஆனந்த் மற்றும் பொன்னன்படுகை கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்