கண்ணீருடன் காவல் நிலையம் வந்த பெண் வைரலாகும் அந்த ஒரு ஆடியோ..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மைகள் - மக்களே உஷார்..! தாம்பரத்தில் பயங்கரம்
தாம்பரத்தை சேர்ந்த திவ்யா என்பவர், பிரபல தனியார் நிதி நிறுவனம் மூலமாக, தவணை முறையில் பொருட்களை வாங்கி பணம் செலுத்தி வந்துள்ளார். இதனிடையே, திவ்யாவின் செல்போனை தொடர்புகொண்ட மர்மநபர், அதே தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, முறையாக தவணைத் தொகை செலுத்தியதால், நிறுவனம் சார்பில் 4 லட்சம் ரூபாய் லோன் தர முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இதற்கு திவ்யாவும் சம்மதம் தெரிவிக்க, கடன் தொகை பெற குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும் என அந்த மோசடி நபர் தெரிவித்துள்ளார். அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக 81 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை திவ்யா, ஜிபே மூலமாக அந்த நபரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தியுள்ளார். அதன் பிறகு மேலும் பணம் செலுத்த வேண்டும் என மோசடி நபர் கூறியதால் அதிர்ச்சி அடைந்த திவ்யா, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திற்கு உறவினர்களுடன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.