அரசு பள்ளியில் திடீர் ஆய்வு.. ஆடிப்போன தலைமை ஆசிரியர் - அதிகாரிகளுக்கு பேரவை கமிட்டி எச்சரிக்கை
விழுப்புரத்தில் அரசு பள்ளி, மருத்துவமனை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுத் தலைவர் அன்பழகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கோலியனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், பள்ளி வளாகத்தில் குப்பைகள் அகற்றப்படாததற்கு தலைமை ஆசிரியர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கொடுத்தனர். மதிய உணவு சமைக்கும் இடத்துக்குச் சென்ற குழுவினர், அங்கு காய்கறிகள் குறைவாக இருந்ததால் அங்கிருந்த பணியாளர்களிடம் கேள்வி எழுப்பி பதிவேடுகளை ஆய்வு செய்தனர்.