நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்காததால், சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் அதிருப்தியடைந்தனர்.நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள டேன் டீ தேயிலை தொழிற்சாலை, உதகை படகு இல்லம் உள்ளிட்டவற்றை, தமிழக சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்தது. பின்னர் அக்குழுவினர் துறை சார்ந்த அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினர். ஆனால் கூட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் , ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில், சுற்றுலா துறையின் உயர் அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இதனால் பொது நிறுவனங்கள் குழுவினர் அதிருப்தியடைந்தனர். மேலும் படகு இல்லத்தில் நடைபெறும் பணிகள் மோசமாக இருப்பதாக கூறிய அவர்கள், சென்னைக்கு வந்து தங்களை நேரில் சந்தித்து இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமென, சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.