மாணவி கொலை வழக்கு - நடந்தது என்ன ? கைதான சதீஷை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு

Update: 2022-10-16 17:11 GMT

மாணவி கொலை வழக்கு - நடந்தது என்ன ? கைதான சதீஷை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு

கடந்த 13ஆம் தேதி, பரங்கிமலை ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவி சத்யப்பிரியா, ரயில் முன்பு தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சதீஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு உடனடியாக சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனிடையே, சத்யபிரியாவின் தாய் மற்றும் அவர் படித்த கல்லூரியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விசாரணையின் முடிவில் கிடைக்கக்கூடிய தகவல்களை வைத்து, அடுத்த வாரம் சதீஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்