தென்னிந்தியாவின் மிகப்பெரிய தங்க நகை விற்பனை நிறுவனமான ஸ்ரீகுமரன் தங்க மாளிகை தங்களது 44-வது கிளையை ஆடிப்பெருக்கு நாளான இன்று அவிநாசியில் தொடங்கியுள்ளது. அவிநாசி புதிய கிளையை சேர்மன் குழந்தைவேல் சந்திரன் திறந்து வைத்தார். தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஜ வுளி மற்றும் தங்க நகை சாம்ராஜ்யமாக தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்கநகை மாளிகை திகழ்ந்து வருவதாக சேர்மன் குழந்தைவேல் சந்திரன் தெரிவித்தார். தங்களது பூர்விகம் தற்போதைய திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகில் தேவராயன்பாளையம் கிராமம் என்றும், தங்கள் பிறந்த மண்ணில் தற்போதுதான் ஸ்ரீகுமரன் தங்க மாளிகையின் 44 வது கிளையை திறந்திருப்பதாகவும் அவர் கூறினார்.