தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் பிறந்தநாள் - முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்
தமிழ் இதழியலின் முன்னோடி சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளில், அவர் ஆற்றிய நற்பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம் என, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், எளிய மக்களுக்கு உலக நடப்புகளைக் கொண்டு சென்று, தமிழ் இதழியலின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கியவரும், கழக ஆட்சியில் சட்டப்பேரவைத் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்து அளப்பரிய சேவை புரிந்தவருமான சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளில், அவர் ஆற்றிய நற்பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.