9 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின் கிடைத்த தீர்வு"- மத்திய அமைச்சருக்கும், தந்தி டிவிக்கும் நன்றி"

Update: 2023-12-17 03:31 GMT

ராமநாதபுரம் அருகேயுள்ள லாந்தை, கன்னனை உள்ளிட்ட 5 கிராமங்களில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அந்த கிராமங்களுக்கு செல்லும் பாதையில், 9 ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இதனால் கடுமையான அவதிக்குள்ளான பொதுமக்கள், சுரங்கப்பாதையை அகற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதுகுறித்து அறிந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டதோடு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். இந்தநிலையில் ரயில்வே நிர்வாகம், அப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையை அகற்றி, மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், பொதுமக்களின் போராட்டங்களை தொடர்ந்து வெளியிட்டதற்காக தந்தி டிவிக்கும் நன்றி தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்