தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலையில் பூஜை நடந்து கொண்டிருக்கும் போது, 3 அடி நீளமுள்ள பாம்பு மடப்பளி உள்ளே சென்றுள்ளது. இதனை கோயில் பூசாரி கண்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அரை மணி நேரத்திற்கு மேலாக தேடியும் பாம்பு பிடிபடாததால் அவர்கள் திரும்பி சென்றனர்.