படுத்து தூங்கும் ரூ.35லட்சம்..புலம்பும் ஜேசிபி உரிமையாளர்.."இதற்கு என்ன தான் வழி"
திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து, வங்கி கடன் மூலம் 35 லட்சம் ரூபாய்க்கு புதிய ஜேசிபி ஒன்றை வாங்கியுள்ளார். வாங்கிய நாள் முதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜேசிபி வேலை செய்வதில்லை எனவும், இதுவைர 5 லட்சம் ரூபாய்க்கு உதிரி பாகங்களை மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிறுவனம், ஜேசிபியை மாற்றிக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மாரிமுத்து இல்லையேல் கடன் கொடுத்த வங்கியில் ஜேசிபியை ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.