கராத்தே மாஸ்டர் ராஜா...மாஸ் ரவுடி `சீசிங்’ ராஜாவானது எப்படி? - தாம்பரம் மார்க்கெட் பிளாஸ் பேக்

Update: 2024-09-23 06:16 GMT

கராத்தே மாஸ்டர் ராஜா...மாஸ் ரவுடி `சீசிங்’ ராஜாவானது எப்படி? - தாம்பரம் மார்க்கெட் பிளாஸ் பேக்

கராத்தே மாஸ்டராக இருந்த சீசிங் ராஜா, பிரபல ரவுடியாக உருவெடுத்தது குறித்து இப்போது பார்க்கலாம்...

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட நரசிம்மன் - அங்கம்மா தம்பதியின் மகனான ராஜா, சென்னை கிழக்கு தாம்பரத்தில் வசித்து வந்தார். 9-ம் வகுப்பு வரை படித்த ராஜா, கராத்தே மாஸ்டராக செயல்பட்டு, நண்பர்களுக்காக அடிதடி போன்ற பிரச்சனைகளில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் வாகனக் கடன் வழங்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி, கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் வாகனங்களை அடாவடியாக பறிமுதல் செய்து, சீசிங் ராஜா என்ற அடைமொழியுடன் பெயர்பெற்றார்.

தாம்பரம் மார்க்கெட் பகுதியில் பிரபல ரவுடியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, மாமூல் வசூல், ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து என, ரவுடி சாம்ராஜ்யத்துக்குள் காலடி வைத்தார்.

ஆந்திராவில் இரட்டைக் கொலை வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட சீசிங் ராஜா, சென்னை மற்றும் ஆந்திராவில் கூலிப்படை தலைவனாக மாறினார். இவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 5 முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் நெருக்கடியால் ஆந்திராவில் தனது மனைவிகள் வீட்டில் பதுங்கியபடி சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலிலும் கால் பதித்து, ஆட்களை கடத்தி பணம் கேட்டு சீசிங் ராஜா மிரட்டி வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்