இது தொடர்பாக அருமனை அரசு மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்களின் பெற்றோர், 10 ஆம் வகுப்பு முடித்து செல்பவர்கள் மற்றும் 11ம் வகுப்பில் சேர உள்ளவர்களிடம் பள்ளி நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சுமத்தினர். இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் சுகுணாவிடம் மாணவர் ஒருவரின் உறவினர் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகி வைரலான நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் விசாரணைக்கு சென்றது.