சவுக்கு சங்கரின் சொத்துக்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளரிடம் பேசிய அவர், சவுக்கு சங்கர் கருப்பு பணத்தில் சொத்துக்களை வாங்கி குவித்திருக்கலாம் எனவும், உடனடியாக வருமான வரித்துறை அவரின் சொத்துக்களை கணக்கிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, புகார் அளித்திருப்பதாகவும் கூறினார்...