தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை செய்யும் சிறுவன் - வைரலாகும் வீடியோ

Update: 2024-07-16 17:06 GMT

சேலம் மாநகரில் இயங்கும் தனியார் பேருந்தில் சின்னஞ்சிறு சிறுவன் ஒருவன் பேருந்து நடத்துனராக டிக்கெட் வழங்குவது, பயணிகளை ஏற்றுவது, விசில் அடிப்பது என வேலை செய்து வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிறுவர்களை பணிக்கு அமர்த்த கூடாது என்ற சட்டம் இருந்தும், சிறுவனை நடத்துனராக பணி அமர்த்தியிருக்கும் பேருந்து நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கூட்டநேரத்தில் ஆபத்தான முறையில் சிறுவன் படிக்கட்டில் நின்று பயணம் மேற்கொண்டு வருவது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்