சேலம் மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, இரிடியம் மோசடி கும்பலை போலீசார் கைது செய்திருக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரை சில நாட்களுக்கு முன்பு தொடர்பு கொண்ட கும்பல், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் செம்பு கிடைத்திருப்பதாகவும்.. அதனை விற்று தந்தால் பல லட்ச ரூபாய் கமிஷனாக தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். தொடர்ந்து, சேலம் சத்தியமங்கலம் வரவழைத்து பத்தாயிரம் ரூபாய் முன்பணம் பெற்று, போலி இரிடியம் செம்பை கொடுத்துள்ளனர். இதையறிந்து அதிர்ச்சியடைந்த சுப்ரமணியத்தை, விவகாரத்தை வெளியில் தெரிவித்தால் கொன்று விடுவதாக கூறி கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். புகாரின் அடிப்படையில் மோசடி கும்பலை தேடி வந்த போலீசார், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சுந்தர பாண்டி, செம்புலிபிரபு மற்றும் ஜீனத் குமார் என மூவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் நிலையில், தலைமறைவாக உள்ள கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த கார்த்திக் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.