திருவண்ணாமலை நகரப் பகுதிகள் மற்றும் கிரிவலப் பாதையில் தங்கி உள்ள சாமியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன... சமீப காலமாகவே கஞ்சா போதையில் சில போலிச் சாமியார்கள் பல்வேறு குற்ற சம்பவங்களின் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளன... இதைத் தடுக்கும் வகையில் சாமியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்று துவங்கியது. கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட சாமியார்கள் காவல்துறையினரிடம் விண்ணப்பங்கள் அளித்து வருகின்றனர். அவ்வாறு அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் கூறுவது சரியாக உள்ளதா என விசாரணை செய்து சரியான விபரங்கள் கொடுத்த சாமியார்களுக்கு புகைப்படங்களுடன் கூடிய அடையாள அட்டைகளை காவல்துறையினர் வழங்கி வருகின்றனர்.