பட்டியலினத்தவர் பகுதிக்கு தண்ணீர் தர மறுப்பு..? - போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

Update: 2023-08-08 02:36 GMT

கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாம்பட்டியில், பட்டியலின சமூகத்தினர் வசிக்கும் 6-ஆவது வார்டில், குடிநீர் தட்டுப்பாடு நிலவியதால், 5 லட்ச ரூபாய் செலவில் குடிநீர் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முழுவதும் முடிவடைந்த பிறகு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல முறை மனுக்கள் கொடுத்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், அந்த அப்பகுதி மக்கள், கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டியலின சமுதாயத்தினர் வசிக்கும் பகுதி என்பதால், தங்களுக்கு தண்ணீர் தர மறுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகனிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தபோது, உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்