இராமநாதபுரத்தில் SIக்கு நேர்ந்த சோகம்
ராமநாதபுரத்தில் தேவர் ஜெயந்திக்காக வைக்கப்பட்ட சமுதாய கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் தாக்கி காவல்துறை எஸ்.ஐ. பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடி நகர் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்காக ஏராளமான பேனர்கள் மற்றும் சமுதாய கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தது. குருபூஜை முடிவடைந்த நிலையில், இவற்றை அகற்றும் பணியில் பரமக்குடி எஸ்.ஐ. சரவணன் ஈடுபட்டார். ரவி தியேட்டர் எதிரே உள்ள கொடிக்கம்பத்தை அகற்றும் போது, கொடிக்கம்பம் மின்கம்பியில் உரசியது. இதனால் மின்சாரம் பாய்ந்து எஸ்.ஐ. சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.