"ஒரு வாரம் கூட ஆகல.. அதுக்குள்ள இந்த நிலைமை.." பார்த்ததும் அதிர்ந்த மக்கள்..
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே புதுப்பிக்கப்பட்ட குடிநீர் உறைகிணறு பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே சேதமடைந்த நிலையில், அதனை மீண்டும் சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுநாகுடியில் உள்ள புத்தூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பல ஆண்டுகளாக உறைகிணற்றிலிருந்து குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர். உறைகிணறு சேதமடைந்த நிலையில், 80 ஆயிரம் மதிப்பில் அது சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பயன்பாட்டிற்கு வரும் முன்னே கிணறு சேதமடைந்ததால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், 7 ஏக்கர் பரப்பளவில் உள்ள தோப்பு ஊரணியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.