``டாடாவில் வடமாநிலத்தவர் இறக்குமதி.. தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பறிப்பு'' - ராமதாஸ் கண்டனம்
ஓசூர் டாட்டா மின்னணு நிறுவன ஆலையில் உத்தரகாண்ட் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஓசூர், கோலார் ஆலைகளுக்கு உத்தரகாண்டிலிருந்து 4 ஆயிரம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அவர், தமிழக இளைஞர்கள், பெண்கள் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் பிற மாநிலங்களிலிருந்து ஊழியர்களை இறக்குமதி செய்வது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். இதனை தமிழக அரசு உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் டாட்டா ஆலையில் 80% பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.