ரயில்வேயில் இளைஞர்களுக்கு காத்திருக்கும் 3 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு - மத்திய அரசு க்ரீன் சிக்னல்
நாடு முழுவதும் 8 புதிய ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பீகார், தெலுங்கானா, மேற்குவங்கம் ஆகிய 7 மாநிலங்களில், 24 ஆயிரத்து 657 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. வரும் 2030-31-ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டங்களுக்கான கட்டுமானத்தின் மூலம் சுமார் 3 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.