பாட்டில் தண்ணீருக்குள் மின்னிய தங்கம்.. மிரண்டுபோன அதிகாரிகள்.. ஏர்போர்ட்டில் பரபரப்பு
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானத்தில் வந்த ஒருவரிடம் 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையைச் சேர்ந்த சுமார் 35 வயது வாலிபர் ஒருவர் பாட்டில் தண்ணீருக்குள் 1.5 கிலோ தங்க பசையை மறைத்து கொண்டு வந்த நிலையில், அதனை அதிகரிகள் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1.23 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.