எரிந்த நிலையில் காவலரின் சடலம்.. போராட்டத்தில் குதித்த உறவினர்கள்..

Update: 2025-03-19 14:43 GMT

மதுரை ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத நபரின் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மீட்கப்பட்ட உடல் விருதுநகரை சேர்ந்த மலையரசன் என்பதும், இவர் சிவகங்கையில் தனிப்படை காவலராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மலையரசன் உயிரிழந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மலையரசனின் உயிரிழப்பிற்கு நீதிகேட்டு அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்