தமிழ் தெரியாத ரயில்வே பணியாளர்.. ஹிந்தி தெரியாத பயணிகள்.. | Railway Officer | Hindi | Tamil

Update: 2024-02-18 09:07 GMT

கோவில்பட்டி ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் இருக்கும் பணியாளருக்கு இந்தி மட்டுமே தெரிந்ததால் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்துப் போன நிலையில், நடவடிக்கை எடுக்கக் கோரி எம்.பி கனிமொழி மத்திய ரயில்வே அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் டிக்கெட் பெற ஒரே ஒரு கவுண்டர் மட்டுமே செயல்படும் நிலையில், எண்ணிக்கையை அதிகரிக்க பயணிகள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர்... இது ஒருபுறமிருக்க கவுண்டரில் வடமாநில பணியாளர் பணியில் உள்ள நிலையில், கடந்த 15ம் தேதி தட்கல் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் வடமாநில பணியாளரால் பரிதவித்துப் போயினர்... அவருக்கு தமிழ், ஆங்கிலம் தெரியாத நிலையில், இந்தி மட்டுமே தெரிந்ததால் பயணிகள் சொல்லும் விவரங்களை புரிந்து கொள்ள முடியாமல் நின்றார்... பயணிகளுக்கு இந்தி தெரியாததால் செய்வதறியாது தவித்தனர். 1 மணி நேரம் வரை தாமதமானதால் ஆத்திரமடைந்த பயணிகள் அங்குள்ள ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்... இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்