பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் சர்ச்சை! மத்திய அரசு அதிரடி உத்தரவு | Puja Khedkar
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பூஜா கேத்கரை, மத்திய அரசு ஐஏஎஸ் பணியிலிருந்து விடுவித்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தற்காலிகமாக பரிந்துரைக்கப்பட்ட பூஜா கேத்கர், தனது அடையாளத்தை மாற்றி, தேர்வு விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை மீறி மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஒருநபர் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது. மேலும் பூஜா மீது மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையமும் கிரிமினல் வழக்கை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்திய நிர்வாக சேவைக்கு பணியமர்த்தப்பட, பூஜா கேத்கர் தகுதியற்றவராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பூஜாவை மத்திய அரசு ஐஏஎஸ் பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது.