`பப்ளிக் எக்ஸாம்’ - அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன செய்தி
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் சிவ் நாடார் பவுண்டேஷன் இணைந்து, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைத்து பராமரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கையெழுத்தானது. தொடர்ந்து, மணற்கேணி இணையம் இனி கணினியிலும் காணும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிதிநிலைக்கேற்ப சரி செய்யப்படும் என தெரிவித்தார். வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இலக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.