பொதுத் தேர்வு... பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு | TN Schools

Update: 2024-02-04 13:57 GMT

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வினை நடத்துவதற்கு மாவட்ட அளவில் காண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 12ம் தேதி முதல் துவங்கவுள்ளது... இந்த நிலையில், பொதுத் தேர்வு பணிகளை கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக பள்ளிக் கல்வித் துறையில் மாநில அளவில் பணியாற்றும் இயக்குநர்கள், இணை இயக்குநர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னைக்கு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஸ்ரீ வெங்கடப்பிரியா, ஈரோட்டிற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கெஜலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்... ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் ஆர்த்தி செங்கல்பட்டிற்கும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி திருவள்ளூருக்கும், தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வேலூருக்கும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் உமா காஞ்சிபுரத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்... அதேபோல் மதுரைக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜமுருகனும், சேலத்திற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளர் குப்புசாமியும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் மாநில திட்ட இயக்குனர் உமா கோயம்புத்தூருக்கும் என 38 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்