தமிழர் வி.கே.பாண்டியனை கடுமையாக தாக்கும் பாஜக... ஒடிசாவில் மோடி சொன்ன வார்த்தை

Update: 2024-05-21 10:14 GMT

ஒடிசா பிரசார களத்தில் தமிழர் வி.கே. பாண்டியனை பிரதமர் மோடி மறைமுகமாக, கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஒடிசாவில் முதல்வர் நவீன் பாட்நாயக்கின் தளபதியாக, தமிழகத்தை சேர்ந்த வி.கே. பாண்டியன் பிஜு ஜனதா தளத்திற்கு பிரசாரம் செய்து வருகிறார். அவரை வெளி மாநிலத்தவர் எனவும் ஒடிசாவை மண்ணின் மைந்தன் ஆள வேண்டும் எனவும் பாஜக பிரசாரம் செய்து வருகிறது. ஒடிசாவின் அங்குல் பகுதியில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போனதற்கு பிஜு ஜனதா தளம் அரசும், முதல்வரை கட்டுப்படுத்துபவரும்தான் பொறுப்பு என விமர்சனம் செய்தார். வீட்டுச்சாவி காணாமல் போய்விட்டால் ஜெகந்நாதரிடம் முறையிடலாம் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியை 6 ஆண்டுகளாக காணவில்லை என்றும், சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் சொல்கிறார்கள் எனவும் விமர்சித்தார். இதை செய்தவர்களை நாம் மன்னிக்க வேண்டுமா...? எனவும் கூட்டத்திலிருந்த மக்களை நோக்கி கேள்வி எழுப்பினார். ஒடிசா பிரசாரத்தில் தமிழகத்தை சேர்ந்த வி.கே. பாண்டியனையே பிரதமர் மோடி மறைமுகமாக கடுமையாக தாக்கியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்