சாலையில் சடலமாக கிடந்த இளைஞர்... காவல் நிலையத்தில் பைக் எப்படி? உடலோடு சாலையில் கதறிய உறவினர்கள்

Update: 2024-05-26 04:06 GMT

சாலையில் சடலமாக கிடந்த இளைஞர்

காவல் நிலையத்தில் பைக் எப்படி?

விலகாத மர்மம்... உடலோடு சாலையில் கதறிய உறவினர்கள்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இளைஞரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, போலீசாரை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெய்வேலி அருகே கீழக்கொல்லியைச் சேர்ந்த வாலிபர் நள்ளிரவில் மர்மமான முறையில் சாலையில் உயிரிழந்த நிலையில் மீட்பு, சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து உறவினர்கள் வடக்குத்து சாலையில் குவிந்ததால் பதட்டம்..

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே மருங்கூர் கீழக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜ்குமார் (35) இவர், நேற்று இரவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து, இவரது இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்த நிலையில் அதிகாலை ராஜ்குமார் காவல் நிலையம் அருகே சாலையில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை அறிந்த உறவினர்கள் வாலிபர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அதிகாலை முதல் பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் நெய்வேலி அருகே வடக்குத்து என்ற இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்