கணவர் கை பட்டதும் ஊராட்சி தலைவியை தூக்கிய போலீஸ்.. இலவச இணைப்பாக அவரும் கைது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த காளீஸ்வரன் என்பவர், அப்பகுதி ஊராட்சிமன்றம் மீது லஞ்ச புகார் அளித்துள்ளார். புதிய வீடு கட்டுவதற்கு அனுமதி தர 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகாரளித்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தபோது, ஊராட்சி மன்ற தலைவி ஜோஸ்பீன் மேரியின் கணவர் அருள்ராஜ் பணத்தை பெற்றுள்ளார். உடனடியாக அவரை மடக்கிப் பிடித்து கைது செய்த போலீசார், அரசு விழாவில் கலந்து கொண்டிருந்த ஊராட்சி மன்ற தலைவியையும் கைது செய்தனர்.