பெங்களூரை சேர்ந்த அர்ச்சனா சிங் என்பவரது இ-மெயிலுக்கு, அதில், 49 ரூபாய்க்கு 48 முட்டைகள் விற்பனை செய்வதாக விளம்பரம் வந்துள்ளது. இதை நம்பிய அர்ச்சனா சிங், இ-மெயிலில் இருந்த லிங்கை கிளிக் செய்து, கிரெடிட் கார்டு தகவல்களை அளித்துள்ளார். அவரது செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணையும் பதிவு செய்து 49 ரூபாயை அவர் செலுத்தியுள்ளார். அடுத்த சிறிது நேரத்தில், அவரது கிரெடிட் கார்டில் இருந்து 48 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. அதன்பிறகே, ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அர்ச்சனா சிங், மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று, ஆஃபர் எனக்கூறி வரும் மெசேஜ், இ-மெயிலை நம்பி கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களை கொடுக்க வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்