பெண்ணின் பெட்டியை பறித்த அதிகாரிகள்.. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பரபரப்பு
விமான நிலையத்தில் பயணியின் பெட்டியை அதிகாரி சோதனை செய்ய முயன்ற போது, அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்வதற்காக பெண் பயணி ஒருவர் தனது மகளுடன் வந்துள்ளார். அனைத்து கட்ட சோதனைகளும் முடிவடைந்த பின்னர், விமானத்திற்கு செல்வதற்காக அப்பயணி பேருந்தில் ஏறினார். அப்போது, சுங்க இலாகா துணை ஆணையர், பயணியிடம் அவரது பெட்டியை சோதனை செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளார். இதனால், அதிகாரியிடம் அப்பயணி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பணியின் பெட்டியை அதிகாரி எடுத்துச் சென்றார்