தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர்மன்றத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளிக்கப்பட்ட நிலையில், வரும் 18ம் தேதி வாக்கெடுப்பு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.24 வார்டுகளை உள்ளடக்கிய செங்கோட்டை நகராட்சியில், தி.மு.க.வை சேர்ந்த ராமலட்சுமி நகர்மன்றத் தலைவராக உள்ளார். பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என, மன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், அ.தி.மு.க.வை சேர்ந்த 10 கவுன்சிலர்கள் மற்றும் பா.ஜ.கவை சேர்ந்த 3 கவுன்சிலர்கள், நகர்மன்றத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி, ஆணையரிடம் கடந்த மாதம் 8-ம் தேதி மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்த 6 கவுன்சிலர்களும் மனு அளித்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட ஆணையர் சுகந்தி, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு வரும் 18-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்