வெளுத்து வாங்கிய கோடை மழை.. தண்ணீருக்குள் மாட்டிக்கொண்ட கார் - கதறும் சுற்றுலா பயணிகள்
நீலகிரி மாவட்டம உதகையில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்த நிலையில், படகு இல்லம் செல்லும் வழியில், மழை நீர் குளம்போல தேங்கி நின்றது. மேலும் இரயில் பாலத்தில் மழை நீர் தேங்கி நின்றதால், சுற்றுலா பயணிகள் மட்டுமில்லாமல் உள்ளுர் மக்களும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த நிலையில் தண்ணீரை கடக்க முயன்ற சுற்றுலா பயணியின் கார் நீரில் சிக்கியது.தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காரில் சிக்கியருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.